Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!

6 days ago 2
ARTICLE AD

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு தமிழில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகராக மட்டுமின்றி கார்பந்தய வீரர், துப்பாக்கிச் சுடும் வீரர், புகைப்படக் கலைஞர் என பனமுகத்திறன் கொண்ட நடிகர் அஜித் தற்போது கார்பந்தயத்தில் முழு அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

கார் பந்தயத்தில் அஜித்:

அஜித்குமார் தனக்கென தனி அணியை உருவாக்கி அந்த அணி பல போட்டிகளில் போடியங்களில் கோப்பைகளை வென்று வரலாறு படைத்து வருகிறது. இந்த நிலையில், அஜித்குமார் வெளிநாட்டில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அவர் அங்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பெருமைப்படுத்துவேன்:

என்னுடைய அணி, என்னுடைய ஓட்டுநர்கள், என்னை வரவேற்ற அனைத்து குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்களுக்கும் இதே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாவது ஒருநாள் அவர்களைப் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Here is the vox pop with #AjithKumar sir, in which he expressed his thanks to fans during his speech. “I would like to express my thanks to all the teams, all the drivers, who made me so welcome. I also say the same to my fans I hope someday to make them proud.I hope I hope” ~AK https://t.co/avivYnqGAl
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) October 24, 2026

விமர்சனங்கள்:

நடிகர் அஜித்குமார் தற்போது கார்பந்தயத்தில் முழு அளவில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்கு பக்கபலமாக ரசிகர்கள் உள்ளனர். அவர் வெளிநாட்டில் கார் பந்தயத்தில் பங்கேற்று வந்தாலும் அவரை காண்பதற்காக ரசிகர்கள் வெளிநாட்டில் குவிந்து வருகின்றனர்.

துபாயில் அவர் பங்கேற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். திரையுலகில் சுமார் கால் நூற்றாண்டு நேரெதிர் போட்டியாளர்களாக திகழ்ந்த இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர்ப்பரித்தனர். அதேசமயம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

உருக்கம்:

மேலும், சிலர் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை அஜித் கண்டித்ததையும் விமர்சித்தனர். பின்னர், போர்ச்சுகல் கார் பந்தயத்தில் ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற அஜித்குமாரின் வீடியோவிற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அஜித் தனது ரசிகர்களுக்கு நன்றி என்றும், என்றாவது ஒருநாள் தனது ரசிகர்களை  பெருமைப்பட வைப்பேன் என்றும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Read Entire Article