தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிலும் கலந்து கொண்டு இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ந்த நிலையில், இவருக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம், குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அஜித் உட்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட 139 பேரும், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் விருதுகளை பெற்றனர். நடிகர் அஜித் தன்னுடைய மனைவி, மகள், மற்றும் மகனுடன் சென்று பெருமைக்குரிய இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து நேற்று காலை டெல்லியில் இருந்து, அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிய நிலையில், ரசிகர்களில் கூட்ட நெரிசலில் சிக்கிய அஜித்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதைக்கு அவர் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், திடீர் என காலில் வலி அதிகரித்த நிலையில், இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து சற்று முன்னர் சிகிச்சை முடிந்து அஜித், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள், காலில் ஏற்பட்ட வலிக்காக பிசியோதெரபி சிகிச்சை கொடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி... இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து பிசியோ சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறியுள்ளதோடு . ஓய்வில் இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கார் ரேஸில் கலந்து கொள்ள துவங்கியது முதல், தொடர்ந்து அஜித் செய்தியாளர்களை சந்தித்து வரும் நிலையில்... நாளைய தினம், அஜித் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களை மகிழ்விற்கும் விதத்தில், வீடியோ அல்லது அறிக்கை ஏதேனும் வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.