Ajey: The Untold Story of a Yogi review : யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு படம் எப்படி இருக்கு...முழு விமர்சனம் இதோ

2 months ago 5
ARTICLE AD

உத்தரர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியிருக்கும் படம்   Ajey The Untold Story of a Yogi . சாந்தனு குப்தா எழுதிய முதலமைச்சரான துறவி புத்தகத்தை தழுவி இப்படத்தை ரவிந்திர கெளதம் இயக்கியுள்ளார். திலிப் பச்சன் மற்றும் பிரியங் தூபே படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார்கள். கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

அஜய் த அன்டோல்ட் ஸ்டோரி ஆப் எ யோகி  விமர்சனம்

இந்திய சுதந்திரத்திற்கு பின் பல்வேறு அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டுள்ளன. முன்னாள் இந்திய பிரதமர் மறைந்த மன்மோகன் சிங் (The Accidental Prime Minister ) , இந்திரா காந்தி (Emergency) , பால் தாக்கரே (Thackeray), ஜெயலலிதா (தலைவி) என பல்வேறு அரசியல் தலைவர்களின் வாழ்க்கை திரையில் படமாக வெளியாகியிருக்கின்றன. ஆனால் இதில் பெரும்பாலான படங்கள் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில் உத்தர பிரதேச முதலமைச்சரின் வாழ்க்கையை சொல்லும்  Ajey The Untold Story of a Yogi திரைப்படமும் ஒரு சுமாரான படமாகவே உருவாகியுள்ளது.

ஆனந்த் ஜோஷி இப்படத்தில் யோகி ஆதித்யநாத்தாக நடித்துள்ளார். இவரது இயற்பெயர் அஜய். தனது சொந்த ஊரில் பஸ் ஓட்டுநராக இருக்கும் அஜயை உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக அவரது தந்தை படிக்க அனுப்புகிறார். ஆனால் கல்லூரியில் சூழலில் பெரிதும் நாட்டமில்லாமல் இருக்கும் அஜய் மஹாந்த் அவைத்தியநாத் ஆசிரமத்தில் சேர்கிறார். அங்கிருந்து உத்தர பிரதேசத்திற்கு அவர் முதலமைச்சராவது வரை தொடர்கிறது கதை.

முதல் பாதியில் நிதானத்தோடும் தெளிவாகவும் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அஜய்  யோகி ஆதித்யநாத் ஆக மாறியதும் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகி அவர் செய்த  சாதனைகளும்  என அடுத்தடுத்து காட்டிகள் பட்டியலிடப்படுகின்றன.   படத்தில் நடிகர்கள் மற்றும் ஒளிப்பதிவாளரின் வேலை பாராட்டிற்குரியவை .

Read Entire Article