Airports Shut: பறக்கவே முடியாது..! 32 விமான நிலையங்களை மூட அரசு உத்தரவு, டெல்லி? எங்கெல்லாம் தெரியுமா?

7 months ago 9
ARTICLE AD

Airports Shut: பாகிஸ்தான் உடனான போர் பதற்றம் காரணமாக, பொதுமக்களுக்கான விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 விமான நிலையங்களை மூட உத்தரவு:

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை மூடுவதோடு,  பொதுமக்களுக்கான விமான சேவையையும் ரத்து செய்ய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 15ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ள விமான நிலையங்களில் ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களும் அடங்கும். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதனைதொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து வலுவடைந்து வரும் சூழலில், விமான நிலையங்களை மூடும் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த விமான நிலையங்கள் மூடல்?

விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறுவிப்பின்படி, “அதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகனெர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டோன் மற்றும் ஜம்மு விமான நிலையங்கள் அடங்கும். இதுபோக ஜெய்சால்மர், ஜாம்நகர், ஜோத்பூர், கண்டாலா, கங்ரா, கெஷோத், கிஷன்கர்க், குளுமணாலி மற்றும் லே விமான நிலையங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. லூதியானா, முந்த்ரா, நளியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்சவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ் மற்றும் உற்றலை  ஆகிய விமான நிலையங்களையும் வரும் 15ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக 24 விமான நிலலையங்களை மட்டுமே மே 9ம் தேதி நள்ளிரவு வரை மூடிவைக்க, விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

#TravelAdvisory
Following a notification from aviation authorities on continued closure of multiple airports in India, Air India flights to and from the following stations – Jammu, Srinagar, Leh, Jodhpur, Amritsar, Chandigarh, Bhuj, Jamnagar and Rajkot – are being cancelled till…
— Air India (@airindia) May 9, 2025

டெல்லி விமான நிலையம் மூடல்?

இதனிடையே, செயல்பாட்டு காரணங்களால் டெல்லி மற்றும் மும்பை விமான தகவல் பிராந்தியங்களுக்குள் 25 விமானப் போக்குவரத்து வழித்தடங்களின் சேவையும் மே 14ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால்,  விமான நிறுவனங்கள் மாற்று வழிகளைத் திட்டமிடுமாறு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், இடையூறுகளை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள விமான நிலையம் தற்போது வரை தொடர்ந்து இயங்கி வருவதாகவும், சூழலை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள் சொல்வது என்ன?

ஏர் இந்தியா நிறுவனம் தனது சமூகவலைதள கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் பல விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், சண்டிகர், பூஜ், ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட்டுக்கான விமானங்கள் மே 15 ஆம் தேதி காலை 5.29 மணி வரை ரத்து செய்யப்படுகிறது”  என அறிவித்துள்ளது. இதேபோன்று இண்டிகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகனெர், ஜோத்பூர், கிஷன்கார்க் மற்றும் ராஜ்கோர் ஆகிய 10 இடங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் மே 110 வரை ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, விமான நிறுவனங்களின் இணைய பக்கத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article