மர்ம தேசம்

1995 முதல் 1998 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர் மர்ம தேசம். அமானுஷ்யமான கதைகளை மையப்படுத்தி உருவான இத்தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் இந்த தொடருக்கான திரைக்கதையை எழுதினார். நாகா மற்றும் சி ஜே பாஸ்கர் இணைந்து இந்த தொடரை இயக்கினார்கள். சன் டிவியைத் தொடர்ந்து ராஜ் டிவி , மீண்டும் சன் டிவி என குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த தொடர் ஒளிபரப்பானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் முதல் முறைய பார்த்த அதே திகில் அனுபவத்தை கொடுக்கும் விதமாக இந்த தொடர் இருந்ததே அதன் வெற்றிக்கு காரணம். இந்த தொடரை இயக்கிய நாகா தற்போது இயக்கியுள்ள மித்தாலஜிக்கல் சீரிஸ்தான் ஐந்தாம் வேதம்.

ஐந்தாம் வேதம் டீசர்

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ் மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம் எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்

ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. 90களின் புகழ்பெற்ற புராண சாகச திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும், ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் அசத்தலான டீசரை ZEE5 வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.

The Fifth Vedha is about to be revealed on ZEE5!

Delighted to release the teaser of this mega-mythological thriller of 2024, #AindhamVedham, from the GOAT director of #Marmadesam, Naga sir!

▶️ https://t.co/KiwFmHYdYu

Best wishes to the whole team!@ZEE5Tamil @abiramimedia…

— venkat prabhu (@vp_offl) October 11, 2024

கதை

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE5 இல் அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்ட்ரீமாகும் ஐந்தாம் வேதம் சீரிஸின் மூலம் மர்மங்கள் அடங்கிய புதிய சாகசத்தில் இணையுங்கள்!