Affair Murder: தட்டி கேட்ட கணவன் - 2 குவாட்டர் பாட்டில், கேங் சேர்த்து போட்டு தள்ளிய மனைவி - மிஸ் ஆகாத ஸ்கெட்ச்

7 months ago 7
ARTICLE AD

Affair Murder: தெலங்கானாவில் கணவனால் மனைவி கொல்லப்பட்ட விவகாரம், 100 நாள் வேலை தொழிலாளியால் அம்பலமாகியுள்ளது.

அம்பலமான உண்மை:

தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால் மாவட்ட காவல்துறையினர் தொழில்நுட்ப ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒரு கொடூரமான கொலை வழக்கை வெற்றிகரமாக துப்பு துலக்கி குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், கொல்லப்பட்டவரின் மனைவி தனது காதலனுக்கு அழுத்தம் கொடுத்து, மற்றவர்களை பணத்தால் கூட்டு சேர்த்துகொலையைத் திட்டமிட்டு செய்ததும், ஒரு தகாத உறவு கொலைக்கு வழிவகுத்ததும் அம்பலமாகியுள்ளது.

100 நாள் வேலையின்போது துர்நாற்றம்:

கடந்த 19ம் தேதி 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் கள உதவியாளரான வெங்கடேஷ் கவுட், கட்டு மண்டலத்தின் KT டோடி கிராமத்திற்கு அருகிலுள்ள ஹனுமப்பா குட்டாவில் மண் குவியலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகப் புகார் அளித்தார். ஆய்வு செய்தபோது, ​​பகுதியளவு புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக குற்ற எண் 61/2025 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிரிவுகள் 103(1), 61(2)(a), 238 r/w 3(5) BNS ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

கொல்லப்பட்டது யார்?

கைப்பற்றப்பட்ட உடலை கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டது, குர்வா நரசிம்ஹுலு என அடையாளம் காணப்பட்டது. அதன்படி, மத்தேலபண்டா கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு (மால்டகல் மண்டல்) 12 ஆண்டுகளுக்கு முன்பு கங்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்கிற பத்மா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட திருமண தகராறு காரணமாக, ஸ்ரீதேவி தனது கணவரைப் பிரிந்து தாயின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு குடிசையில் வசிக்கத் தொடங்கினார். அவர்களுக்கு 9 வயது மகன் இருந்தான். பிரிந்திருந்தாலும், நரசிம்ஹுலு அவ்வப்போது வந்து தனது மனைவியை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஏற்பட்ட தகாத உறவு

இதற்கிடையில், ஸ்ரீதேவிக்கு அதே கிராமத்தில் வசிக்கும் தனது உறவினரான குருவா அஞ்சலப்பாவுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நரசிம்ஹுலுவுக்கு தெரிந்ததும், மனைவி உடன் அடிக்கடி சண்டைகள் வெடித்தன. இதனால் தனது கணவரை கொலை செய்யத் தீர்மானித்த ஸ்ரீதேவி, தனது காதலரான அஞ்சலப்பாவை நரசிம்ஹுலுவைக் கொல்லுமாறு வற்புறுத்தினார். பின்னர் அஞ்சலப்பா, புஸ்ஸபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பரான குண்டா கோவிந்துவை அணுகி, கொலையைச் செய்ய ரூ. 1 லட்சம் வழங்குவதாக பேரம் பேசியுள்ளார்.

பக்கா பிளான்:

காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, “கோவிந்து நரசிம்முலுவுடன் நட்பு கொண்டு நட்பு பாராட்ட தொடங்கியுள்ளார். கடந்த 17ம் தேதியன்று மாலையில், கோவிந்து நரசிம்ஹுலுவை மைலகட்டா ஸ்டேஜில் உள்ள ஒரு உள்ளூர் மதுபானக் கடைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு குவாட்டர் பாட்டில் மதுபானங்களை குடித்த பிறகு, கோவிந்து தனது மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் இருந்த நரசிம்ஹுலுவை கேடி டோடி கிராமத்திற்கு அருகிலுள்ள ஹனுமப்பா குட்டாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆஞ்சநேயுலு என்பவர் நரசிம்முலுவைத் தடுத்து நிறுத்திய பிறகு, கோவிந்து கூர்மையான கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். பின்னர் அங்கு ஏற்கனவே 100 நாள் வேலையின்போது தோண்டப்பட்டு இருந்த குழியில் உடலைப் புதைத்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அருகிலுள்ள தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதனிடையே, கோவிந்து புஸ்ஸபுரம் கிராமத்தைச் சேர்ந்த குண்டா ஆஞ்சநேயுலு என்கிற துப்பண்ணேவை அழைத்து, ரூ.50,000 உதவி செய்வதாக உறுதியளித்து கூட்டாளியாக சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

நான்கு  பேர் கைது

குற்றச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீதேவி, குருவ அஞ்சலப்பா, கோவிந்து மற்றும் ஆஞ்சநேயலு ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஒரு மோட்டார்சைக்கிள் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article