ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?

3 weeks ago 3
ARTICLE AD

TN Election Results 2026: தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தவெக-விற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இரு தொகுதிகளையும் பறிகொடுத்த அதிமுக:

கடந்த முறை தன் வசம் இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தை எப்படியேனும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக களமிறங்கியது. இதில் மதுராந்தகத்தில் தவெக-விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், தாராபுரத்தில் அதிமுக கை ஓங்கியிருப்பதாகவே கருத்துக்கணிப்புகள் வெளியாகியது.

திமுக - அதிமுக என்ற அரை நூற்றாண்டு போட்டி வரலாற்றை உடைத்து, அதிமுக-வின் 6 எம்எல்ஏ-க்களை தன் வசம் இழுத்துக் கொண்ட தவெக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி இரு தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனாலும், இரு தொகுதிகளையும் தவெக கைப்பற்றியுள்ளது. தாராபுரத்தில் தொடக்கத்தில் அதிமுக முன்னிலையில் இருந்த நிலையில், பின்னர் தவெக அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னேறி தொகுதியை கைப்பற்றியது.

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தங்கள் வசம் இருந்த இரு தொகுதிகளையும் பறிகொடுத்ததுடன்,  தற்போது நடந்த இடைத்தேர்தலில் 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுக-விற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து சறுக்கலை அதிமுக சந்தித்து வரும் நிலையில், பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு கட்சியைக் கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. கட்சியின் முக்கிய தலைவர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்பட்டோரும், முன்னாள் அமைச்சர்களும் வேறு வேறு கட்சியில் ஐக்கியமாகிய விட்ட நிலையில், அதிமுக-வின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது.

அதிமுக என்ன செய்யப்போகிறது?

இந்த இடைத்தேர்தலில் இரண்டில் ஒரு தொகுதியையாவது கைப்பற்றினால் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்திருந்தனர். ஆனால், அவரது தலைமையில் அதிமுக இதுவரை சந்தித்த எந்த தேர்தலில் முதன்மையான வெற்றியைப் பெறவில்லை. தற்போது நடந்த இடைத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவியிருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு இது மேலும் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அந்த இடைத்தேர்தலிலும் அதிமுக என்ன நிலையைச் சந்திக்க நேரிடும்? என்று அந்த கட்சியின் நிர்வாகிகள் வேதனையில் உள்ளனர்.

Read Entire Article