ADMK vs DMDK: தேமுதிகவை ஓரம் கட்டுகிறதா அதிமுக? - ஈபிஎஸ் சொன்ன பதிலால் பரபரப்பு!

9 months ago 8
ARTICLE AD
கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின் போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ஈபிஎஸ், "கூட்டணி பற்றிய பேச்செல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்காதீர்கள். யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?." என்று தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி வரும் நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் பதில் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Read Entire Article