Actress Sadha: விக்ரம் அண்ணா.. சதா தங்கச்சி.. ஷூட்டிங்கில் நடந்த கூத்து.. கடுப்பான இயக்குநர் ஷங்கர்!

1 month ago 3
ARTICLE AD

அந்நியன் படப்பிடிப்பில் நடைபெற்ற வேடிக்கையான சம்பவம் ஒன்றை நடிகை சதா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.

காலத்தை தாண்டி நிற்கும் “அந்நியன்”

கடந்த 2005ம் ஆண்டு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் “அந்நியன்”. இந்த படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அந்நியன் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இன்றும் டிவியில் ஒளிபரப்பானால் அனைவராலும் விரும்பி பார்க்கக்கூடிய படமாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்நியன் படத்தின் காமெடி உள்ளிட்ட காட்சிகள் மீம் டெம்பிளேட் ஆகவும் வலம் வருகிறது.

ஷூட்டிங்கில் நடைபெற்ற காமெடி சம்பவம்

இதனிடையே ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சதா, நானும், விக்ரமும் அழைத்துக் கொண்ட ஒரு வார்த்தையால் இயக்குநர் ஷங்கர் கோபப்பட்டதை தெரிவித்துள்ளார். அதாவது, “எனக்கு விக்ரமுடன் நடிப்பதற்கு ரொம்ப நன்றாக இருந்தது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அவரை அண்ணா என அழைப்பது வழக்கம். அந்த பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. நானும் அவரை விக்ரம் அண்ணா என அழைத்தேன். ஒரு கட்டத்தில் விக்ரமும் என்னை தங்கச்சி என அழைத்தார். இப்படியான சூழலில் ஒருநாள் இந்த அண்ணன் - தங்கச்சி என அழைத்துக் கொள்வது இயக்குநர் ஷங்கருக்கு தெரிய வந்தது.

உடனே எங்கள் இருவரையும் அழைத்து திட்டி விட்டார். நான் விக்ரம், சதா இருவரையும் ராமன் -சீதா ஜோடி போல உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்னவென்றால் உங்களை அண்ணன் - தங்கச்சி என அழைத்துக் கொள்கிறீர்கள். நாளை இந்த படம் வெளியாகும்போது நீங்கள் இப்படி அண்ணன், தங்கச்சி என அழைத்துக் கொள்வது தெரிந்தால் ஒருவரும் படம் பார்க்க வரமாட்டார்கள். அதன்பிறகே எங்களுக்கு அந்த தவறு புரிந்தது. இதனைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் அப்படி அழைக்கவில்லை என தெரிவித்திருப்பார்.

சதாவின் தற்போதைய வாழ்க்கை

ரவிமோகன் நடித்த ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சதா. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, நான் அவள் அது, புலிவேஷம், எலி, டார்ச் லைட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார். சதா தற்போது வன விலங்குகளை புகைப்படம் எடுக்கும் ஒரு கலைஞராக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article