நடிகர் கமல்ஹாசனுடன் முதல்முறையாக நடித்தபோது நிகழ்ந்த சம்பவத்தை நடிகை மீனா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.

அந்த நேர்காணலில் அவ்வை சண்முகி படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நடிகை மீனா, “அந்த காலத்தில் கமல்ஹாசன் படம் என்றால் ஒரு லிப் டூ லிப் முத்தக் காட்சி இருக்கும். அவ்வை சண்முகி படம் ஒப்புக்கொள்ளும் போது முதலில் அது எனக்கு நினைவில் வரவில்லை. அந்தப் படத்தில் இரண்டாம் நாள் ஷூட்டிங் ஒரு பூங்காவில் அவர் என்னிடம் பேசும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அப்போது உதவி இயக்குனர்கள் இது முத்தக்காட்சி என தெரிவித்துவிட்டார்கள். அதைக் கேட்டவுடன் நான் பயந்து நடுங்கி விட்டேன் ஐயையோ முத்தக் காட்சியா இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே என முழித்தேன்.

இதை நான் எப்படி செய்ய முடியும்?. எனக்கு சௌகரியமான உணர்வு ஏற்படவில்லை?. இதனை நான் செய்ய மாட்டேன் என எனது அம்மாவிடம் கூறி நீங்கள் தான் இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும் என சொன்னேன். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நம்மால் ஒரு விஷயத்தை செய்ய முடியாது என சொல்லி விட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எனது அம்மாவை பேச சொல்லி அனுப்புவதற்குள் அவர் ஷாட் ரெடி என கூறினார். எனக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது” என நகைச்சுவையாக நடந்த சம்பவத்தை நடிகை மீனா தெரிவித்திருப்பார்.

அவ்வை சண்முகி படம்

1996ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் “அவ்வை சண்முகி”. இந்த படம் ஹாலிவுட்டில் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் மீனா ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், மணி வண்ணன், நாசர், ஹீரா, நடிகை ராணி, ரமேஷ் அரவிந்த், கிரேஸி மோகன், நாகேஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தேவா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். வாலி அனைத்து பாடல்களையும் எழுதினார். இந்த படம் ஹிந்தியிலும் கமல்ஹாசனால் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகை மீனா மீண்டும் கமல்ஹாசன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் உருவான தெனாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். தற்போது மீனாவின் மகளான நைனிகாவும் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.