ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார் கார்த்தி கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் பிரசாதமும், ஆசியும் வழங்கினர். கார்த்தி நடித்திருக்கும் மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பான சத்யம் சுந்தரம் திரைப்படம் கடந்த வாரம் ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.