<p>பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்த தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலியின் கணவரான தர்மேந்திரா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p>