<p>Actor Delhi Ganesh: தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 80 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது கூறப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. நாடாக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். தூத்துக்குடியில் பிறந்த இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். </p>