19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமாக தோல்வியடைந்தது.

U19 ஆசிய கோப்பை 2024:

19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2024 சாம்பியன் பட்டத்தை வங்கதேசம் அணி வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் பேட்டிங் இறுதிப்ப்போட்டியில் படு மோசமாக இருந்தது. இந்திய அணியில் கேப்டன் முகமது அமான் மட்டும் நீண்ட நேரம் போராடினார், அவரும் 65 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தப்படியாக ஹர்திக் ராஜ் 24 ரன்களும், ஆன்ட்ரே சித்தார்த் 20 ரன்களும், கே.பி கார்த்திக்கேயா 21 ரன்களும் எடுத்தனர்.

முன்னதாக, யுத்ஜித் குஹா, சேத்தன் சர்மா மற்றும் ஹர்திக் ஆகியோர் அற்புதமான பந்துவீச்சால் இந்தியாவுக்கு 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் நிர்ணயித்தது.

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்:

வங்கதேசம் கொடுத்த இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களாலும் வங்கதேச பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் எதையும் செய்ய முடியவில்லை. ஆயுஷ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.அதன் பின் 9 ரன்கள் எடுத்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷியும் வெளியேறினார். அடுத்ததாக வண்ட்க்ஹ ஆன்ட்ரே சித்தார்த்தும், கே.பி.கார்த்திகேயாவும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். சித்தார்த் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார். கார்த்திகேயா 21 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: Border Gavaskar Trophy : போய் வரவா! ஆஸ்திரேலியாவில் இது தான் கடைசி தொடர்! விடைப்பெறும் மூன்று இந்தியர்கள் யார்?

போராடிய கேப்டன் அமான்:

நீண்ட நேரம் போராடிய கேப்டன் முகமது அமான் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிகில் குமார் ரண் கணக்கை துவங்காமல் ட்க் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹர்வன்ஷ் சிங் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கிரண் சோர்மலே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் ஹர்திக் ராஜ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடி ஆட்டம் இந்திய அணியின் தோல்வி வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது. இறுதியில் இந்திய அணி 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கோப்பையை வென்ற வங்கதேசம்:

இந்த மூலம் வங்கதேச அணி U19 ஆசியக்கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று அசத்தியது.