Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

4 weeks ago 5
ARTICLE AD

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்களின் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டம்  இன்று நடைபெற்று வருகிறது.

உதயநிதி டெபாசிட் வாங்கி இருக்க முடியாது

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: திமுக எப்போதும் அதிகாரத்தை பற்றி மட்டுமே யோசிக்கும். திமுக இரண்டாவமு முறை வென்றதாக  வரலாறே இல்லை. சிறந்த ஆளுங்கட்சியாக திமுக இருந்ததில்லை. இன்றைக்கு சிறந்த எதிர்க்கட்சியாகவும் இல்லை. ஆட்சி அதிகாரத்தை பெற்று குடும்ப ஆட்சி  மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஸ்டாலின் உருவாக்கினார். கூட்டணி இல்லாமல் திமுகவால் 10 தொகுதிகளில் வென்று காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினார். கூட்டணி இல்லை என்றால் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது. கூட்டணி இல்லை என்றால் இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது.

இதையும் படிங்க: DMK MP Kalyanasundaram: திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

விசிக, தவெக ஒன்று தான்

ஆட்சி அமைப்பதற்கு கூடுதல் இடங்கள் தேவைப்பட்ட போது முதலில் ராகுல்காந்திக்கு தான் போன் செய்தார் முதலமைச்சர் விஜய். ராகுலிடம் முதலமைச்சர் விஜய் பேசுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று திருமாவளவன் சொன்னார். பேரவையில் திருமா என்னுடைய அரசியல் ஆசான் என உதயநிதி சொல்கிறார். வெளியில் சோபா என அவதூறு பேசுகிறார். விசிக, தவெகவின் பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் கொள்கை ஒன்று தான். திருமாவளவன் அண்ணணிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்.

முதலமைச்சருக்கு எந்த ஈகோவும் கிடையாது

மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா ஆமாம் சோபா கொடுத்தோம். கூட்டணி கட்சி தலைவர்கள் கால் மீது போட்டு  அமருவதற்காக  சோபா அனுப்பி வைத்தோம். நீங்கள் செய்தது ராஜதந்திர அரசியல். நாங்கள் செய்தது சோபா அரசியலா? என கேள்வி எழுப்பினார். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வர மாட்டார். பரந்தூர் விமான நிலைய திட்டம், மேல்மா சிப்காட் திட்டம் கைவிடப்பட்டது. திட்டங்களை கைவிடுவதில் முதலமைச்சருக்கு எந்த ஈகோவும் கிடையாது. பெண்களை மையப்படுத்தி அவதூறாக பேசி வரும் திமுகவினர். அன்பில் மகேஷ் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளன.

மதவாதம் நுழைய முடியாது

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னர், நாங்கள் எங்கள் தலைவரின் பெயரை ‘விஜய்' என்றுதான் குறிப்பிட்டோம். ஆனால், எங்கள் தலைவரோ ‘சி.ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டுக் கொண்டார். இதுதான் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. ஏனென்றால், எங்களுடைய தலைவர் மக்களையும், பெண்களையும் நம்பினார். தான் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து வந்திருந்தாலும், தன்னுடைய பெயரைச் சொல்லி, ‘இந்த நாடு மதச்சார்பற்ற நாடு; இதில் என்றும் மதவாதம் நுழைய முடியாது' என்று சொன்னவர் எங்கள் தலைவர். இதுதான் பாஜகவிற்கான செய்தி. இதற்கு மேல் என்ன செய்தி கொடுக்க முடியும்? என ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Read Entire Article