கரூர் சம்பவம்- ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சை கருத்து

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தவெக அரசு புதிதாக பதவியேற்றுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணையும் விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் விஷயத்தில் நடந்த கணக்கு வழக்கு இன்னும் முடியவில்லை. அந்த கணக்கு வழக்கை முடிக்காமல் விடமாட்டோம். எங்கள் தலைவர் விஜய் மீது கை வைத்தீர்களே உங்களை விடமாட்டோம். போலீசாரை வைத்து மக்களை கொன்று குவித்தீர்களே? அதற்கான எல்லா உண்மைகளும் வெளியே வரும் என ஆவேசமாக பேசிருந்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆதவ் அர்ஜூனா பேச்சு- திமுக எதிர்ப்பு

இந்த பேச்சை திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஆதவ் அர்ஜூனா பேச்சிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில், ஆதவ் அர்ஜுனா பேச்சு சாட்சிகளை கலைக்க வழிவகை செய்யக்கூடும். எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுக தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாட்சியங்களை கலைத்து விடுவார் எனக்கூறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி கடந்த திமுக ஆட்சியின் போது நீ்ககப்பட்டார். இதே போல ஆதவ் அர்ஜூனா சாட்சியங்களை கலைக்க கூடும் என திமுக தெரிவித்திருந்த்து.

இந்த நிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பாக திமுக தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக மீது தவெக பழி சுமத்த முயல்வதாகவும், அமைச்சர் என்ற பதவியை வைத்து சாட்சியை கலைக்க முயற்சி செய்வதாகவும் முறையிடப்பட்டது. எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் தீவிரத்தை தன்மை காரணமாக இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கரூர் சம்பவம் பின்னனி என்ன.?

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவராக இருந்த விஜய், நாமக்கல் மற்றும் கரூர் பகுதியில் பிரச்சாரம் செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் மதியம் 12 மணியளவில் கரூரில் பிரச்சாரம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், மாலை 7 மணிக்கே கரூர் பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக முன்னதாக தமிழக காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், சிறப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.