<p>ஆதார் கார்டை புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாட்டில் இதுவரை பலரும் புதுப்பிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே புதுப்பிக்க கால அவகாசம் இருப்பதாலும் பல இடங்களில் மக்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆதார் காடை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் கார்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் கார்டை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. </p>