”55 வயசான மாமா தான் வேண்டும்” திருமணமான 45 நாளில் கணவனை போட்டு தள்ளிய 2K மனைவி - என்னா ஸ்கெட்ச்சு

5 months ago 5
ARTICLE AD

Bihar Crime: தான் விரும்பிய மாமாவை திருமணம் செய்துகொள்வதற்காக, கூலிப்படையை ஏவி கணவனை கொன்றதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனை கொன்ற மனைவி:

திருமணமான சில நாட்களிலேயே தேனிலவிற்கு அழைத்துச் சென்று, மேகாலயாவில் வைத்து கணவனை மனைவியே கொன்ற சம்பவத்தின் பதற்றமே இன்னும் முழுமையாக தணியவில்லை. இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 25 வயதான இளம்பெண், திருமணமான 45 நாட்களிலேயே கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கும் திருமணத்தை மீறிய தகாக உறவு தான் காரணம் என கூறப்படுகிறது.

கூலிப்படையை ஏவிய மனைவி

காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதியதாக திருமணமான குஞ்சா தேவி, தன்னுடன் தகாத உறவில் இருந்த 55 வயதான தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து, தனது கணவனான பிரியான்ஷுவை கொல்ல கூலிப்படையை பயன்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் குஞ்சா தேவி மற்றும் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள ஜீவன் சிங்கை தேடி வருகின்றனர்.

”மாமா தான் வேண்டும்” - நடந்தது என்ன?

திருமணத்திற்கு முன்பே ஜீவன் சிங் மற்றும் குஞ்சா தேவி தகாத உறவில் இருந்ததோடு, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் அதை விரும்பாமல் கட்டாயப்படுத்தி, நபிநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பர்வான் கிராமத்தைச் சேர்ந்த ப்ரியான்ஷுவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து வாழ குஞ்சா தேவி முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 25ம் தேதியன்று தனது தங்கை வீட்டிற்குச் சென்றுவிட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியான்ஷு, நவிநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார். அப்போது மனைவியை தொடர்புகொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரையேனும் அனுப்பும்படி வலியுறுத்தியுள்ளார்.

கணவர் சுட்டுக்கொலை

தொடர்ந்து, பொடிநடையாக வீட்டை நோக்கி புறப்பட்ட பிரியான்ஷுவை , எதிர்பாராத விதமாக திடீரென இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியபோது, குஞ்சா தேவி கிராமத்தை விட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பெண்ணின் தொலைபேசி தகவல்களை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். அதில், குஞ்சா தேவி தனது மாமா ஜீவன் சிங்குடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது தெரிய வந்தது. அதனடிப்படையில் அவரது தொலபேசி எண் விவரங்களை ஆராய்ந்ததில், அவர் கொலையாளிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது அம்பலமாகியுள்ளது. இதன் வாயிலாக குஞ்சா தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள ஜீவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தகாத உறவு காரணமாக மனைவியே கணவனை கொல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article