45 நாள்களில் 6 முறை பாம்பு கடி.. உயிர் பிழைத்த 'அதிசய மனிதன்'.. உத்தர பிரதேசத்தில் விநோதம்!

1 year ago 7
ARTICLE AD

உத்தர பிரதேசம் மாநிலம் ஃபதேபூர் நகரில் கடந்த 45 நாள்களில் 6 முறை பாம்பு கடித்த பிறகும் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அந்த நபரால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.

6 முறை பாம்பு கடித்த பிறகும் உயிர் பிழைத்த இளைஞர்: ஃபதேபூர் நகரில் வசித்து வருபவர் விகாஸ் துபே. கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, இவரை முதன்முதலாக பாம்பு கடித்துள்ளது. அன்று இரவு, படுக்கையில் இருந்து எழுகையில் பாம்பு கடித்திருக்கிறது. அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு இரண்டு நாள்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால், இந்த சம்பவம் நடந்து 8 நாள்களில் இரண்டாவது முறையாக பாம்பு மீண்டும் கடித்துள்ளது. இதன் காரணமாக, பாம்பின் மீதான பயம் அவரை வாட்ட தொடங்கியுள்ளது.

அவரது பயம் அதிகரித்து வந்த போதிலும், அவர் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் ஒருமுறை வீடு திரும்பினார். தொடர்ச்சியான பாம்பு கடி சம்பவங்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் 17ஆம் தேதி, விகாஸை மூன்றாவது முறையாக பாம்பு கடித்துள்ளது. இந்த முறை, அந்த பாம்பு கடி அவரது உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.

வியப்பில் மருத்துவர்கள்: இதனால் அவர் சுயநினைவை இழந்தார். செய்வதறியாமல் தவித்த அவரது குடும்பத்தினர், அவரை மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விகாஸ் துபேவை அடிக்கடி பாம்பு கடிப்பதை கண்டு டாக்டர். ஜவஹர் லால் தலைமையிலான மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர் லால் கூறுகையில், “இந்த வழக்கு விசித்திரமானது. மூன்றாவது பாம்பு கடிக்கு பிறகு, கிராமத்தை விட்டு வெளியேறுமாறு விகாஸை நான் அறிவுறுத்தினேன்" என்றார்.

மருத்துவர்களின் ஆலோசனையை தொடர்ந்து, ஃபதேபூர் ராதா நகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு விகாஸ் சென்றுள்ளார். இடத்தை மாற்றிய பிறகும், நான்காவது முறையாக பாம்பு அவரை கடித்துள்ளது. மீண்டும், அதே தனியார் மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரே நபரை பாம்பு தொடர்ந்து கடிப்பதை கண்டு மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால், இந்த முறையும் அவரை வெற்றிகரமாக உயிர் பிழைக்க வைத்துள்ளனர் மருத்துவர்கள். ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டில் ​​விகாஸ் துபேவை ஐந்தாவது முறையாக பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து, தங்கள் வீட்டிற்கே பெற்றோர் அவரை அழைத்து சென்றனர். ஜூலை 6 ஆம் தேதி, பாம்பு அவரை 6ஆவது முறையாக கடித்துள்ளது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

Read Entire Article