சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயாணன் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாகவும் இந்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் விட 2 வயது குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன்

தி கோட் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. கோட் படத்தைப் போலவே தந்தை மகன் என சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். பிரபல ஹாலிவுட் நிறுவனமான லோலா வி.எஃப்.எக்ஸ் இந்த படத்திற்கான வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இரு நடிகைகள் நடிக்க உள்ளனர். ரம்யா நம்பீசன் இப்படத்தில் நடிப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். 39 வயதான ரம்யா நம்பீசன் 41 வயதான சிவகார்த்திகேயனுக்கு அண்ணையாக இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

சேயோன்

மறுபக்கம் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ளார். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள தாய்கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.