40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கடத்தல் : எட்டையாபுரம் அருகே டேங்கர் லாரியை பறிமுதல் செய்து 2 டிரைவர்களை கைது செய்த போலீசார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஈரால் சர்வீஸ் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த AP39 M1119 என்ற வெளி மாநில வாகனப் பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 40 ஆயிரம் லிட்டர் பயோடீசல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் டேங்கர் லாரியில் ஏரி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணம் இன்றி பயோடீசல் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

பயோடீசல் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது தெரிய வந்தது. இதை அடுத்து எட்டயபுரம் போலீசார் டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட பயோ டீசலை பறிமுதல் செய்தனர். மேலும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பகதூர் , தூத்துக்குடி மாவட்டம் வடக்கு செமபுதூர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் ஆகிய இருவரையும் பிடித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடிமை பொருள் வழங்கல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.