40 ஆண்டுக்கு பிறகு உயிர்பெற்ற வாய்க்கால்... தண்ணீர் வந்த வேகத்தில் தேங்கிய அதிர்ச்சி!

3 weeks ago 3
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த முக்கிய வாய்க்கால்களுக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ள நிலையில், காவேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான பழைய சிமெண்ட் குழாய் ஒன்று காவிரி நீரின் பயணத்துக்கே தடையாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, அந்த குழாயை உடனடியாக அகற்றி, வாய்க்காலின் நீர்மட்டத்துக்கு ஏற்ற வகையில் பெரிய அளவிலான புதிய குழாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆண்டுகளாக காத்திருந்த வாய்க்கால்கள்

கும்பகோணம் தாலுகா வளையப்பேட்டை பகுதியில் உள்ள பழவாத்தான்கட்டளை வாய்க்காலில் இருந்து பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் உள்ளிட்ட 5 முக்கிய நீர்வழித்தடங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக தூர்வாரப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாய்க்கால்களில் புதர்கள் மண்டியும், மண் மற்றும் கழிவுகள் தேங்கியும் நீர்வழித்தடம் சுருங்கியது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளும் ஏற்பட்டதால், வாய்க்கால் இருந்த இடமே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

இதன் காரணமாக கும்பகோணம் மாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் சிரமத்தை சந்தித்தனர். நகரப் பகுதிக்குள் கட்டிடங்களுக்கு இடையே வாய்க்கால்கள் சிக்கிக்கொண்டதால் இயற்கையான நீரோட்டமும் பாதிக்கப்பட்டது.

மீண்டும் உயிர்பெற்ற நீர்வழித்தடம்

இதையடுத்து, பழைய வாய்க்கால்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அமைச்சர் வினோத் ரவி, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வாய்க்கால்களை ஆய்வு செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதிகாரிகள் வாய்க்கால்களின் நீளம், அகலம், நீர்வழிப்பாதை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகளும் தொடங்கின.

முதற்கட்டமாக கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் உள்ள கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் வரையிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

சோதனைக்காக திறக்கப்பட்ட காவிரி நீர்

இதற்கிடையே, கடந்த 24-ந் தேதி பழவாத்தான்கட்டளை வாய்க்காலில் இருந்து பிரியும் பழைய தேப்பெருமாநல்லூர் வாய்க்கால் வழியாக காவிரி ஆற்றில் இருந்து சோதனை அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரி நீர் மாங்குடி, வளையப்பேட்டை, பேட்டைத் தெரு வழியாகச் சென்று காவேரி நகர் பகுதியை வந்தடைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் மீண்டும் காவிரி நீர் வருவதை பார்த்த பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

காவேரி நகர் பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் அருகே தண்ணீர் செல்வதற்கு முடியாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றது. இதனால், காவிரி நீர் தங்கள் பகுதிக்கு முழுமையாக செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.

‘சின்ன’ குழாய்... பெரிய பிரச்சினை!

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவேரி நகர் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் புதிய சாலை அமைக்கும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக தெரிவித்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்காலில் சிமெண்ட் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழாய், தற்போது தூர்வாரப்பட்டுள்ள வாய்க்காலின் படுக்கை மட்டத்தைவிட உயரமாகவும், தேவையான அளவைவிட சிறிய விட்டம் கொண்டதாகவும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனால்தான் சோதனை அடிப்படையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கரைகள் உடையும் அபாயம்

தண்ணீர் ஒரே இடத்தில் தொடர்ந்து தேங்கினால் வாய்க்கால் கரைகள் பலவீனமடைந்து உடையும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரக்கூடிய காலங்களில் வாய்க்காலில் அதிக அளவு நீர் வந்தால், சிறிய குழாய் காரணமாக நீரின் வேகம் தடைபட்டு அழுத்தம் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இதனால் கரைகள் சேதமடைவதுடன், அருகில் உள்ள பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்.

உடனடி நடவடிக்கை தேவை

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களை தூர்வாரி, காவிரி நீரை மீண்டும் நகருக்குள் கொண்டு வருவதற்காக நீர்வளத்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. ஆனால், நீர்வழித்தடத்தில் உள்ள இதுபோன்ற தடைகளை அகற்றாமல் விட்டால், மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முழுப் பலனும் கிடைக்காமல் போய்விடும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவேரி நகர் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, தற்போது உள்ள சிறிய விட்டம் கொண்ட பழைய சிமெண்ட் குழாயை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக வாய்க்காலின் படுக்கை மட்டத்துடன் சரியாகப் பொருந்தும் வகையில், அதிக நீரை தடையின்றி கொண்டு செல்லக்கூடிய பெரிய அளவிலான புதிய சிமெண்ட் குழாய் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட வாய்க்காலில் காவிரி நீர் தடையின்றி ஓட வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Read Entire Article