350 சிசி எஞ்ஜினில் முத்தான 5 பைக்குள்.. Royal Enfieldல் கம்பீரமாக போக எதை வாங்கலாம்?

3 weeks ago 4
ARTICLE AD

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. கம்பீரம், நெடுந்தூர பயணங்களுக்கு என்று ராயல் என்ஃபீல்ட் இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 350 சிசி எஞ்ஜின் இரு சக்கர வாகனங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Royal Enfield Hunter 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளில் ஒன்றாக Royal Enfield Hunter 350. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரத்து 559. இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 4 ஆயிரத்து 604 ஆகும். ட்ரம், டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளது. ட்யூப் மற்றும் ட்யூப்லஸ் வேரியண்ட்களிலும் உள்ளது. 349.34 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது.

2. Royal Enfield Classic 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் இந்த Royal Enfield Classic 350. இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 23 ஆயிரத்து 222 ஆகும். இதில் மொத்தம் 7 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆகும். ட்யூப் மற்றும் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.

3. Royal Enfield Classic 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் Royal Enfield Classic 350. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 98 ஆயிரத்து 436 ஆகும். 4 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 48 ஆயிரத்து 417 ஆகும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் உள்ளது. ட்ரம், டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

4. Royal Enfield Meteor 350:

ராயல் என்ஃபீல்ட் Royal Enfield Meteor 350 தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 37 ஆயிரத்து 511. இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 61 ஆயிரத்து 770 ஆகும். இதில் ட்யூப் மற்றும் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.- 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 349.34 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

5. Royal Enfield Goan Classic 350:

ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் கால பைக் இந்த Royal Enfield Goan Classic 350. இதில் 2 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 66 ஆயிரத்து 328. இதன் மற்றொரு வேரியண்ட் விலை ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரத்து 599 ஆகும். 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 36.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 13 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.

Read Entire Article