27 ஆண்டுகளாக நேர்மையை சோதிக்கும் ‘ஆளில்லா கடை’! என்ன விஷயம் தெரியுங்களா?

4 weeks ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பாபநாசத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி 27-ம் ஆண்டாக நேற்று ஒருநாள் மட்டும் ‘ஆளில்லா கடை’ திறக்கப்பட்டது. கடைக்கு விற்பனையாளர் யாரும் இல்லாத நிலையில், பொதுமக்களே தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை செலுத்தினர். இந்த வித்தியாசமான முயற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

27 ஆண்டுகளாக தொடரும் முயற்சி

பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆளில்லா கடை நடத்தப்பட்டு வருகிறது. நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது 27-ம் ஆண்டை எட்டியுள்ளது.

நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சிலம்பரசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சீனிவாசன், விக்னேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன் மற்றும் டிஎஸ்பி முருகவேல் ஆகியோர் ஆளில்லா கடையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

விற்பனையாளர் இல்லை... நம்பிக்கை மட்டுமே!

ஆளில்லா கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பொருளின் மீதும் அதன் விலை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை எடுத்துக்கொண்டு, அதற்குரிய தொகையை கடையில் வைக்கப்பட்டிருந்த டப்பாவில் செலுத்தினர். பணம் செலுத்தும்போது சரியான சில்லறை தேவைப்பட்டவர்கள், டப்பாவில் பணத்தை வைத்துவிட்டு தங்களுக்கு தேவையான சில்லறையையும் எடுத்துக்கொண்டனர்.

கடையில் யாரும் கண்காணிக்காத நிலையிலும் பொதுமக்கள் தங்களுக்கான பொருளை எடுத்துக்கொண்டு உரிய தொகையை செலுத்தியது, இந்த முயற்சியின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள்

இதுகுறித்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூறுகையில், “பாபநாசத்தில் கடந்த 27 ஆண்டுகளாக மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி ஆளில்லா கடை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் நேர்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

இந்த கடையில் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருளுக்கும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளை எடுத்துக்கொள்பவர்கள் அதற்குரிய தொகையை அருகில் வைக்கப்பட்டுள்ள டப்பாவில் செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டு சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் லாப நோக்கம் எதுவும் கிடையாது. நேர்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த கடை நடத்தப்படுகிறது. விற்பனை மூலம் கிடைக்கும் தொகை சேவைத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது” என்றனர்.

ஒரு நாள் கடை... சொல்லும் பாடம்!

வியாபாரம் நடைபெறும் கடையில் விற்பனையாளரின் கண்காணிப்பு இல்லாமல் பொருட்களை எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தும் இந்த நடைமுறை, நேர்மை என்பது யாருடைய கட்டாயத்தாலும் வருவது அல்ல; நம்முடைய மனசாட்சியிலிருந்து வர வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவதாக அமைந்தது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் இந்த ஆளில்லா கடை, பொருட்களை விற்பனை செய்வதைவிட சமூகத்தில் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு ஆகியவற்றை விதைக்கும் விழிப்புணர்வு முயற்சியாக தொடர்ந்து வருகிறது. இந்த கடைக்கும் இன்றும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article