தஞ்சாவூர்: பேங்க் ஆஃப் பரோடாவில் 2,500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 60 இடங்கள் இருக்குங்க. இன்னும் 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்கணும். அதனால கால தாமதம் செய்யாம உடனே விண்ணப்பம் செய்திடுங்க. அறிவிப்பின் முழு விபரம் உங்களுக்காக!!!

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer)
மொத்த காலி பணியிடங்கள்: 2,500; தமிழ்நாட்டில் 60.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 30. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.48,480 - 85,920
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம்.
பட்டாயக் கணக்காளர், செலவு கணக்காளர், இன்ஜினீயரிங் அல்லது மருத்துவத்தில் தொழில்முறை தகுதி.
குறிப்பு: ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம்.
உள்ளூர் மொழியில் நன்கு படிக்க, எழுத, பேச தெரிய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.

ஆன்லைன் தேர்வு, சைக்கோ மெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்றவற்றின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

உங்கள் விண்ணப்பங்களை ibpsonline.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24, 2025. அதனால காலதாமதம் வேண்டாம். இன்னும் 10 நாட்கள்தான் இருக்கு. உடனே விண்ணப்பதை அனுப்பிடுங்க. வேலை வாய்ப்பை பெற்றிடுங்க.

பரோடா வங்கி ஒரு துடிப்பான மற்றும் துடிப்பான பணிச்சூழலைக் கொண்டுள்ளது, இது தொழில் முன்னேற்றத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அதன் ஊழியர்களுக்கு அவர்களின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை ஆராய ஒரு தளத்தையும் வழங்குகிறது. மகிழ்ச்சியான ஊழியர்கள் மிகவும் உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று வங்கி நிர்வாகத்தினர் நம்புகின்றனர்.

ஊழியர்கள் வழக்கமான வேலையைத் தாண்டி தங்கள் ஆர்வங்களையும், ஆர்வத்தையும் ஆராய ஊக்குவிப்பதற்காக, பாங்க் ஆஃப் பரோடா ஆண்டுதோறும் நாடகம், இசை & நடனம், கேரம், சதுரங்கம், பூப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் பல்வேறு மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகளை நடத்துகிறது. வருடாந்திர விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் 3வது சனிக்கிழமை பல்வேறு பிராந்தியங்கள்/மண்டலங்களில் கொண்டாடப்படுகிறது, அங்கு அனைத்து ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள்/விளையாட்டுகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இப்படி பணி மட்டுமின்றி உங்களின் தனித்திறமைகளையும் கொண்டாடும் வங்கியில் நீங்களும் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.