2026ம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் செப்டம்பர் 4ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் அன்றைய நாளில் எப்படி வழிபடலாம் என்பது பற்றிக் காணலாம்.

2026 கிருஷ்ண ஜெயந்தி

இந்து மதத்தில் மிகவும் முக்கியமான கடவுள்களில் ஒருவர் கிருஷ்ணர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் எட்டாவது அவதாரமாக தோன்றியவர். வசுதேவர், வாசுகி தம்பதியினரின் எட்டாவது மகனான கிருஷ்ணர் மதுரா நகரின் சிறைச்சாலையில் பிறந்து கோகுலத்தில் தனக்கே உரிய சுட்டித்தனத்துடன் வளர்ந்தார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா என்ற பாடலை நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் தன்னை வேண்டுபவர்களுக்கு எல்லாம் கிருஷ்ண பகவான் அள்ளிக்கொடுப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இப்படியான நிலையில் கிருஷ்ணர் பிறந்தநாள் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி 2026ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய வெள்ளிக்கிழமை வருகிறது. மற்ற அஷ்டமி திதி அபசகுனமாக பார்க்கப்படும் நிலையில் கிருஷ்ணர் பிறந்த இந்த அஷ்டமி திதி மிகுந்த சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி நாள் இம்முறை வெள்ளிக்கிழமை வருவது மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் வீட்டையும், பூஜையறையையும் சுத்தப்படுத்திவிட வேண்டும். கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்குரிய பலகாரங்கள், வெண்ணெய், உணவு படையல் போன்றவை ஆகியவையும் அந்த நாளில் வீட்டில் தயார் செய்ய வேண்டும். முடியாதவர்கள் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் கிருஷ்ணர் சிலை அல்லது புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழந்தை கிருஷ்ணர் நம் வீட்டிற்குள் வந்து வழிபாட்டில் வைக்கப்படும் பொருட்களை உண்பதாக ஐதீகம் கொண்டு வீட்டு வாசலுக்கு வெளியே இருந்து பச்சரிசி மாவினால் கால் தடங்களை வரைய வேண்டும். குழந்தைகள் இருந்தால் அவர்களின் காலடி தடத்தைப் பதிக்கலாம். பூஜையறையில் கிருஷ்ணரின் சிலைக்கு பூக்கள் சூடி அவருக்குரிய மந்திரங்கள், பக்தி பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.

சினிமாவில் ஏராளமான கிருஷ்ணர் தொடர்பான பாடல்கள் உள்ளது. அதனைக் கூட இந்நாளில் தாராளமாக பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றால் கிருஷ்ணரின் மந்திரமான ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண ஹரே ஹரே என்ற மந்திரத்தையாவது 108 முறை சொல்ல வேண்டும். இதன்பின்னர் முடிந்தால் அருகிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். மேலும் வழிபாட்டில் படைக்கப்பட்ட பிரசாதங்களை குடும்பத்தினர், வீட்டின் அருகிலுள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். குழந்தைகள் இந்த உணவை உண்பதன் மூலம் கிருஷ்ணரே நம் இல்லம் தேடி வந்ததாக பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.