2025 Top 5 Flop Movies: கொஞ்சநெஞ்சம் பில்டப்பா கொடுத்தீங்க? 2025-ல் அட்ட பிளாப் ஆகிய டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?

6 months ago 7
ARTICLE AD

2025-ஆம் ஆண்டு துவங்கி தற்போது 6 மாதம் எட்டிவிட்டது. இந்த ஆண்டு சிறு பட்ஜெட்டில் வெளியான படங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தாலும், பிக் பட்ஜெட்டில் வெளியான படங்களுக்கு பாதகமாக மாறியுள்ளது. இந்த ஆறு மாதத்தில், அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி அட்ட பிளாப் ஆன முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றி பார்க்கலாம்.

வணங்கான்:

இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'வணங்கான்'. இயக்குனர் பாலா இயக்கத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இயக்குனர் பாலாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படு தோல்வியை சந்தித்தது.

விடாமுயற்சி:

தல அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ரிலீஸ் ஆன திரைப்படம் விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்த படத்தை, மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம், அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வெளியான நிலையில்... படு தோல்வியை சந்தித்தது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்:

தனுஷ் இயக்கத்தில் இதற்க்கு முன் வெளியான பா. பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அதே எதிர்பார்ப்போடு தனுஷ் இயக்கத்தில் 3-ஆவது படமாக ரிலீஸ் ஆனது தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவஷ் ஹீரோவாக நடிக்க, அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த படம்... முதல் நாளே மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது.

ரெட்ரோ:

நடிகர் சூர்யாவை கங்குவா பட தோல்வியில் இருந்து ரெட்ரோ திரைப்படம் மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்பதே ரசிகர்களின் கருத்து. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார். கேங் ஸ்டார் கதைக்களத்தில் வெளியான இப்படம், சூர்யா இதுவரை நடித்திராத வின்டேஜ் கெட்டப்பில் நடித்து கலக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப்:

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்போடு மட்டும் இன்றி, அதிக பட்ஜெட்டிலும் உருவான திரைப்படம் தான் தக் லைஃப். கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவான இந்த படத்தை மணிரத்னம் தயாரித்திருந்தார். கமல் மற்றும் சிம்பு என இரு தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்போடு, நாயகன் படத்தின் 2-ஆம் பாகமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், மிகப்பெறிய தோல்வியை சந்தித்தது. ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தாலும், மோசமான விமர்சனங்கள் காரணமாக மிகப்பெரிய தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது.

Read Entire Article