2 குழந்தைகள் வாந்தி, மயக்கம்... கெட்டுப்போன சிக்கன் விற்பனை...

4 weeks ago 6
ARTICLE AD

கோவை மாவட்டம் லட்சுமி மில் சந்திப்பில் அமைந்துள்ள பிரபலமான லுலு மால் வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் லட்சுமி மில் பகுதியில் உள்ள லுலு மாலுக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள உணவகத்தில் ரோஸ்டட் சிக்கன், சிக்கன் சாண்ட்விச் மற்றும் சிக்கன் லாலிபாப் ஆகியவற்றை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் அந்த உணவை சாப்பிட்ட சில நேரங்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துர்நாற்றம் வீசிய சிக்கன்

உணவை சாப்பிட்ட பிறகு, அவர்கள் வாங்கிய உணவுப் பார்சலுடன் வெளியே வந்தபோது, இரண்டு குழந்தைகளுக்கும் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார், உடனடியாக வாங்கிய சிக்கனை பரிசோதித்தபோது அதில் கடுமையான துர்நாற்றம் வீசியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீண்டும் அந்த உணவகத்துக்கு சென்று புகார் அளித்தபோது, அங்கு இருந்த நிர்வாகத்தினர் அலட்சியமாக பதிலளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை செய்து பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவித்ததாக கூறி, சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்படும் என்றும், உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவது குறித்து கடுமையான கண்காணிப்பு தேவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article