17 கைதிகள் தப்பிய விவகாரம்! தேக்கம்பட்டி சிறையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு!

1 day ago 3
ARTICLE AD

தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிப்பு! கைதிகள் அறைகளுக்கு இரும்புச் சங்கிலிப் பூட்டு, 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையில் இருந்து தப்பித்த 17 கைதிகளை 43 மணி நேர தேடுதலுக்கு பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், 13 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகளில் அடைக்கப்பட்டனர். நேற்று பிடிபட்ட ரெஜின், பொன் முத்து செல்வம், மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகிய நான்கு பேரையும் க.விலக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த பின்னர் சிறையில் இருந்து தப்பிச்சென்ற அனைத்து கைதிகளையும் தனித்தனியாக பிரித்து பாளையங்கோட்டை, சேலம் ,கடலூர் ,கோயம்புத்தூர் ,வேலூர் போன்ற சிறைகளில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே நேற்று மூன்று பேர் பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது ஆஜர் படுத்த நால்வரும் ஓரிரு நாட்களில் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளன

இந்த  நிலையில்,  இந்த சம்பவத்திற்கு பின்னர் தேக்கம்பட்டி சிறை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி சிறை சாலையின் 3 பாதுகாப்பு கோபுரங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் கைதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும்  3 அறைகள் பூட்டு மட்டும் போட்டு பூட்டி இருந்தது. அந்த நடைமுறையை மாற்றி கைதிகள் தங்கி இருக்கும் அறையின் கதவுகள் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு அதில் பூட்டு போடும் வழக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பூட்டும் கதவுகள் எளிதாக திறந்து விட முடியாது என்ற காரணத்தினால் இந்த நடைமுறையை தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைக் கைதிகள் தப்பிய விவகாரத்தில் தேக்கம்பட்டி சிறையில் பணியாற்றிய சிறை அதிகாரிகள் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக இதுவரை புதிய பணியிடங்கள் நிரப்ப வில்லை. அதே நேரத்தில் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில் தேக்கம்பட்டி மாவட்ட சிறை சாலையில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேக்கம்பட்டி சிறை சாலையில் கூடுதல் காவலர்களை நியமிக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் கிளை சிறையை  மூடிவிட்டு அங்கு பணியாற்றும் காவலர்களை தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு மாற்றவும்,  தேக்கம்பட்டி மாவட்ட சிறையின் பாதுகாப்பை பலப்படுத்தவும் சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article