<p>மார்ச்‌ 2024 இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ 01.08.2024 அன்று முதல்‌ வழங்கப்படும்‌. மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீடு முடிவு உட்பட அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 1 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. </p>
<h2><strong>பெறுவது எப்படி?</strong></h2>
<p>பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளியிலும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையத்திலும்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண்‌ பட்‌டியலினைப் பெற்றுக் கொள்ளலாம்‌.</p>