1200 வருடங்கள் பழமையான சாமி சிலைகள் கண்டெடுப்பு.. அதிரவைக்கும் வரலாறு - எங்கு தெரியுமா ?

7 months ago 9
ARTICLE AD

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 1200 வருடங்கள் பழமையான கொற்றவை , முருகன் மற்றும் விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

1200 வருடங்கள் பழமையான சிலைகள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தி. நல்லாளம் கிராமத்தில் பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீதரும் இணைந்து திண்டிவனம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபொழுது கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்த தகவலின் பேரில் தி.நல்லாளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டிவனம் - மரக்காணம் சாலையில் பெருமுக்கலில் இருந்து தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள T . நல்லாளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழமுக்கல் கிராமத்தில் மஞ்சள் பூசப்பட்ட நிலையில் வழிபாட்டில் ஒரு சிலை காணப்பட்டது. அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில், அது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை என்று கண்டறியப்பட்டது.

சுமார் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டுள்ளது. அழகான மூன்றடுக்கு கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க , வட்டமான முகத்தில் புண் சிரிப்புடன் தடித்த உதடுகளும், செவிகளில் பத்ர மற்றும் மகர குண்டலங்களும் அணிந்து கழுத்தில் சரப்பளியுடன் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார்.

எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் பிரயோக சக்கரம் ஏந்தியும் ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள், அம்பு மற்றும் சர்ப்பம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கைகள் முறையே மலர் மொட்டு, வில், கேடயம் ஏந்திய நிலையில் காட்டப்பட்டுள்ளது. வழக்கமாகக் கொற்றவையின் இடையருகே இருபுறமும் காட்டப்படும் வீரர்கள் இச்சிற்பத்தில் காட்டப்படவில்லை எனினும் இடதுபுறம் கிளி காட்டப்பட்டுள்ளது.

எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறது. இக்கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

மேலும் இக்கொற்றவைக்கு அருகே சிறிது தூரத்தில் இரண்டு பலகை சிற்பங்கள் மண்ணில் சாய்ந்துகிடப்பது கண்டறியப்பட்டு அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில், அவை இரண்டும் கொற்றவை சிற்ப அளவை ஒத்த பல்லவர் கால முருகர் மற்றும் விநாயகர் சிற்பம் என்று கண்டறியப்பட்டது.

முருகர் சிலை

அழகிய கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க, ஒரு காதில் பத்திர குண்டலமும், மற்றொரு காதில் மகரகுண்டலமும், கழுத்தில் பட்டையான சரப்பளி மற்றும் இடையில் உதிரபந்தம் அணிந்து கம்பீரமாக யானை மீது அமர்ந்து இரண்டு கரங்களுடன் முருகன் காட்சி தருகிறார். தனது வலது கையில் வேலும், இடது கையை இடை மீது ஊரு முத்தரையிலும் வைத்துக் காட்சிதரும் முருகரின் இடது பக்கம் சேவல் கட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் தனிச் சிறப்பு. சேவலுடன் கூடிய பல்லவர் கால முருகர் சிற்பம் இதுவரை சொற்பமாகவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. ஆடை அணிகலன் மற்றும் சிறப்பமைதியை வைத்து இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டு என்று கருதலாம்.

விநாயகர் சிற்பம்

இச்சிற்ப அளவை ஒத்த விநாயகர் சிற்பமும் இதனருகே காணக்கிடைக்கிறது. அழகிய மகுடம் தலையை அலங்கரிக்க, நீண்ட காதுமடல்களுடன் பருத்த வயிறும் கொண்டு காட்சி தரும் நிலையில் மேல்வலதுகரத்தில் பரசும் , மேல் இடதுகரத்தில் பாசமும் காட்டப்பட்டுள்ளது. கீழ் இருக்கரங்களில் உள்ள ஆயுதங்கள் தெளிவாக தெரியவில்லை. பத்மாசன கோலத்தில் அமர்த்த நிலையில், காலின் அருகே மூன்று பூத கணங்கள் காட்டப்பட்டுள்ளது இச்சிற்பத்தின் தனிச் சிறப்பு. இச்சிற்பமும் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பமாகும்.

மேலும் இச்சிற்பத்தின் அருகே உடைந்த நந்தி ஒன்றும் காணப்படுகிறது. இச்சிற்பங்களை வைத்துப் பார்க்கையில், இவ்விடத்தில் பிரம்மாண்டமான பல்லவர் கால கோவில் ஒன்று இருந்து அழிந்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது. காலத்தின் சாட்சியாய் வீற்றிருக்கும் 1200 வருடங்கள்பழமையான இச்சிற்பங்களை ஊர்மக்கள் ஒன்றுகூடி சுத்தம் செய்து வழிபாடு செய்துவந்தால் இவ்வூரின் தொன்மை காக்கப்படும்.

Read Entire Article