கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 120 அடி உயர தேர் சரிந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பிரசித்திபெற்ற மதுரம்மா கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால், யாரும் எதிர்பாராதவிதமாக தேர் ஒரு பக்கமாக சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.