11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு

7 months ago 5
ARTICLE AD

Vanniyar Youth Conference: பாமக சார்பில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சித்திரை முழுநிலவு பெருவிழாவில் வன்முறை ஏற்பட்டு 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா:

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெற உள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே, மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருடன், வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில், 'முழுநிலவு சித்திரை பெருவிழா' நடப்பது வழக்கம். ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறாதது ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

மரக்காணம் வன்முறை:

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சித்திரை முழு நிலவு பெருவிழாவின் முடிவில், பாமக மற்றும் விசிகவினர் இடையே மரக்காணம் பகுதியில் மோதல் ஏற்பட்டது. அதில், பாமகவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் விசிகவை சேர்ந்த 6 பேருக்கு திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதேநேரம், பாமகவைச் சேர்ந்த 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் பாமகவைச் சேர்ந்த யார் மீது குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர். 11 ஆண்டுகளாகியும், சித்திரை முழு நிலவு பெருவிழாவின் முடிவில் அரங்கேறிய மோதல் மறக்கமுடியாத சாதி வன்முறையாக தொடர்கிறது.

நடந்தது என்ன?

கடந்த 2012 இல் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில், பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக பலரால் கண்டிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, 2013ம் ஆண்டு தர்மபுரியில் வெடித்த மோதல் காரணமாக வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஒரு பரபரபான சூழல் நிலவியது. இதன் விளைவாக 2013ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது என ஒரு தரப்பினரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததால்,  2013 ஏப்ரல் 25 அன்று மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற்றது.

வெடித்த சாதி வன்முறை:

மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் சிலர்  கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் அருகே வந்தபோது, கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்களைத் தாக்கியும் அவர்களின் குடியிருப்புகளைக் கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாநாடு முடிந்து அந்த வழியாக திரும்பிய பாமகவினர் மீது, எதிர்தரப்பினர் கற்களாலும் கட்டைகளாலும் தாக்குதல் நடத்தினர். இது பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 5-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பேருந்துகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதோடு, இந்த கலவரத்தில் அரியலூரை சேர்ந்த பா.ம.க. தொண்டர் செல்வராஜ், கும்பகோணத்தை சேர்ந்த விவேக் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான், 11 ஆண்டுகள் வன்னிய சங்கத்தின் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article