10TH, 12TH, ITI, பாலிடெக்னிக், பி.இ - எதுனாலும் ஓகே தான்... உங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் ஆஃபர் !

5 months ago 5
ARTICLE AD

தொழிற்பழகுநர் பயிற்சிக்கான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற 14.07.2025 (திங்கள் கிழமை) - அன்று நடைபெறவுள்ளது.

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தகவல் வெளியிட்டுள்ளார். அதில்...,” மதுரை மாவட்டத்தில் உள்ள 10TH, 12TH, ITI, பாலிடெக்னிக், மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு வருகின்ற 14.07.2025 (திங்கள் கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மதுரை மூன்று மாவடியில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்

இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவர்கள் தங்களது கல்வி தேர்ச்சி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.

தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூபாய் 8,050/- முதல் 15,000/- வரை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது அலை பேசி எண். (8610078848, 8015627275)க்கும் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம்”. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article