தமிழகத்தில் 2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை, நவம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். எனினும் அட்டவணை தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், நவம்பர் முதல் வாரத்தில் இந்த தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

நவம்பர் 4ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தொடக்க கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு இந்த ஆய்வுக் கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், 2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்

தமிழ்நாட்டுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் பொதுத் தேர்வு தேதிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.