100 சதவீத வரி.. ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தை - மயங்கி விழும் மருந்து நிறுவனங்கள்!

2 months ago 4
ARTICLE AD

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் பொறுப்பேற்றது முதலே உலக நாடுகளுக்கு தினசரி பீதியையும், கிலியையும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகள் ட்ரம்பின் முடிவுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

100 சதவீத வரி:

குறிப்பாக, ஒவ்வொரு நாடுகளுக்கான ஏற்றுமதி வரியை ட்ரம்ப் உயர்த்தியது பல நாடுகளின் பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதித்தது. குறிப்பாக, இந்திய - ரஷ்யா உறவால் கோபம் அடைந்த ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீத ஏற்றுமதி வரியை விதித்தார். அமெரிக்காவுடன் 7 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்து வந்த இந்தியாவில் பல துறையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதாவது, அமெரிககாவில் உற்பத்தி ஆலை இல்லாத பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 100 சதவீத வரி என்று உத்தரவு பிறப்பித்தார். பொதுவான மருந்துகளுக்கு இந்த வரி பொருந்தாது என்று ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்திய மருத்துவ வர்த்தகத்திற்கு பேரிடி:

ட்ரம்பின் இந்த உத்தரவு இந்தியாவின் மருத்துவ வர்த்தக துறைக்கு பேரிடியாக விழுந்துள்ளது. அமெரிக்காவிற்கு தேவைப்படும் மருந்துகளில் 47 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் பொது மருந்துகள் ஆகும். இந்த மருந்துகள் அங்கு மலிவு விலையில் கிடைத்து வருகிறது. ட்ரம்பின் இந்த உத்தரவால் அமெரிக்காவிற்கான மருந்து பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தை:

ட்ரம்ப் உத்தரவு எதிரொலியால் இன்று இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு உருவாகியுள்ளது.  அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து முன்னணி நிறுவனங்களான சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ், லூபின் மற்றும் ஜைடஸ் லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றனர். இவர்களின் பெரும்பாலான மருந்துகள் பொது மருந்துகளின் கீழே வராது.

இதனால், இன்று இந்த நிறுவனங்களின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் சரிவை நோக்கிச் சென்றது. இந்திய முன்னணி மருந்து நிறுவனங்களான வோக்ஹார்ட் 9.4 சதவீத சரிவையும், இண்டோகோ ரெமிடீஸ் நிறுவனம் 5.35 சரிவையும், ஜைடஸ் லைஃப் சயின்ஸ் 4.21 சதவீத சரிவையும், கிளென்மார்க் ஃபார்மா 2.99 சதவீத சரிவையும், சன் ஃபார்மா 2.55 சதவீத சரிவையும், லூபின் 2.07 சதவீத சரிவையும், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 1.73 சதவீத சரிவையும் இன்று பங்குச்சந்தையில் எதிர்கொண்டன.

தொடர் நெருக்கடி:

இந்த பாதிப்பு அடுத்து வரும் நாட்களிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரைத் தானே நிறுத்தியதாக தம்பட்டம் அடித்த ட்ரம்பிற்கு எதிராக மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது முதல் தனது ஈகோவால் ஏற்றுமதி வரியை உயர்த்திய ட்ரம்ப், பின்னர் அமெரிக்காவில் அதிகளவு பணியாற்றச் செல்லும் இந்தியர்களை பழிவாங்கும் விதமாக எச்1 பி விசா கட்டணத்தை உயர்த்தினார்.  தற்போது மருந்துகளுக்கான வரியை 100 சதவீதம் உயர்த்தியுள்ளார்.

தொடர்ந்து இந்தியாவை பொருளாதார ரீதியாக பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ட்ரம்பிற்கு பதிலடியாக இந்தியா என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது? 7 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பிற்கு என்ன மாற்று நடவடிக்கை? என்று மத்திய அரசுக்கு பெரும் சவால் எழுந்துள்ளது. மேலும், எச்1 பி விசா விவகாரமும் மத்திய அரசு தலையில் ஏறியுள்ள நிலையில், மருந்துகள் மீதான வரியால் மருந்து பொருட்கள் தேக்கம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. இதனால், வேலையிழப்பு அபாயம் உண்டாகும் சூழல் உருவாகியுள்ளது.

Read Entire Article